Saturday, 6 September 2014

ஐ டீஸரை திருட்டுத்தனமாக வெளியிட்டவர் மீது வழக்கு: தயாரிப்பாளர் தகவல்!

ஷங்கர் இயக்கிவரும் ‘ஐ’ படத்தின் டீஸரை இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டவர் மீது தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Ai-Stillsவிக்ரம், ஏமி ஜாக்சன், உபன் பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ஐ’. இப்படத்தின் இறுதிகட்டமாக ஒரு பாடல் படப்பிடிப்பு மட்டும் விரைவில் துவங்க இருக்கிறது. இம்மாதம் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இசை வெளியீட்டு விழாவில், அர்னால்ட் கலந்துகொள்ள இருக்கிறார்.
இந்நிலையில், ஆஸ்கர் அலுவலகத்தில் தயாரிப்பாளார் ரவிச்சந்திரன் அறையில் இருந்து ‘ஐ’ டீஸரை, டிவிடி ப்ளேயர் மூலம் அவரது டி.வி.யிலேயே ஒளிபரப்பி, அதனை மொபைல் கேமராவில் வீடியோ எடுத்து யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளனர். இணையத்தில் ‘ஐ’ டீஸர் லீக் ஆனது குறித்து அதிர்ச்சியில் இருக்கிறது படக்குழு.
இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை தொடர்புகொண்டு கேட்டபோது, “விரைவில் பிறக்க இருந்த குழந்தையை, குறைப்பிரசவத்தில் வயிற்றில் இருந்து வெளியே எடுத்துவிட்டார்கள். யார் என்று கண்டுபிடித்து விட்டோம். வெளியிட்டவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.
எனக்கு ஒரு விதத்தில் இது தேவைதான். ஏனென்றால், இத்தனை கோடி போட்டு படம் எடுத்துவிட்டு, நான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும். இந்த டீஸர் வெளியீட்டால், என்னை ஒன்றும் செய்துவிட முடியாது. என்னுடைய அலுவலகத்தில் டீ வாங்கிக் கொடுக்கும் பையன் மூலமாகத்தான், அலுவலகத்திற்குள் புகுந்து இருக்கிறார்கள். மொபைலில் எடுத்ததால், டீஸர் முடிந்தவுடன் அவர்கள் பேசியருப்பது பதிவாகி இருந்தது. அதன் மூலமாகத்தான் யார் என்று கண்டுபிடித்தோம்.
இம்மாதம் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் இசை வெளியீட்டு விழா, யாருமே எதிர்பார்க்காத வகையில் பிரம்மாண்டமாக இருக்கும். அர்னால்ட் மட்டுமன்றி வேறு சிலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். விரைவில் யார் எல்லாம் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பதை முறைப்படி அறிவிக்கிறேன்” என்று கூறினார்.

‘அமரகாவியம்’ விமர்சனம்!

‘அமரகாவியம்’ விமர்சனம்!

 


படம் ஆரம்பத்தில் நாயகன் ஜீவாவை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் செல்கிறார். அப்போது தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை நினைத்து பார்க்கிறார். அதிலிருந்து பிளாஸ்பேக் காட்சிகளாக படம் நகர்கிறது.
அமரகாவியம்ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் நாயகன் ஜீவா பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நண்பராக பாலாஜியும் நாயகியான கார்த்திகாவும் அதே வகுப்பில் படித்து வருகிறார்கள். பாலாஜி கார்த்திகாவை ஒரு தலையாக காதலிக்கிறார். அவளிடம் தன் காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறார். காரணம், பாலாஜியின் தந்தையும் கார்த்திகாவின் தந்தையும் நண்பர்கள். தன் காதலை கார்த்திகாவிடம் சொன்னால் தன் தந்தைக்கு தெரிந்து விடும் என்ற பயத்தால் தன் காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
இதனால் தன் காதலை கார்த்திகாவிடம் சொல்ல ஜீவாவை தூது அனுப்புகிறார். ஜீவாவும் பாலாஜியின் காதலை கார்த்திகாவிடம் சொல்கிறார். ஆனால் கார்த்திகாவோ நான் பாலாஜியை காதலிக்கவில்லை. உன்னைதான் காதலிக்கிறேன் என்று ஜீவாவிடம் சொல்கிறார். மேலும் நாளை இதே நேரத்தில் இதே இடத்தில் சந்திக்கும் போது உன் பதிலை கூறுமாறு சொல்கிறாள் கார்த்திகா. இதனை கேட்டு அதிர்ச்சியடையும் ஜீவா, வீட்டிற்கு சென்று சிந்தித்து மறுநாள் தன் காதலை சொல்கிறார். அதன் பின் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
ஜீவாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று நண்பர் என்று பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார் கார்த்திகா. அதேபோல் ஜீவாவும் கார்த்திகாவை தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இருவரும் ஒருநாள் தனிமையான இடத்தில் நெருக்கமாக இருக்கும்போது போலீஸ் இவர்களை பார்த்து கண்டித்து பெற்றோர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரும்படி சொல்கிறார். அதன்படி இருவரின் பெற்றோர்களும் போலீஸ் ஸ்டேனுக்கு வருகிறார்கள்.
அங்கு போலீசார், இருவரும் காதலிப்பதாகவும் நெருக்கமாக இருந்ததாகவும் பெற்றோர்களிடம் கூறுகிறார்கள். இதனால் பெற்றோர்கள் அவமானப்படுகிறார்கள். இரு குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் பெற்றோர்கள் ஜீவாவையும், கார்த்திகாவை பிரிக்க முயற்சி செய்கிறார்கள்.
அமரகாவியம்
ஒருநாள் கார்த்திகாவை சந்திப்பதற்கு வீட்டிற்கு செல்கிறார் ஜீவா. அங்கு கார்த்திகாவின் தந்தை வாகனத்தை எரித்து விடுகிறார் ஜீவா. வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து பார்க்கும் இடைவேளையில் நாயகியிடம் பேசுகிறார் ஜீவா. அப்போது கார்த்திகாவின் தாய் அவர்கள் பேசுவதை பார்த்துவிடுகிறார். பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவித்து ஜீவாவை கைது செய்து விடுகிறார்கள். போலீஸ் விசாரணையில் இவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள்.
இதற்கிடையில் கார்த்திகாவின் பெற்றோர்கள் வீட்டை காலி செய்து விட்டு செல்கிறார்கள். கார்த்திகா, ஜீவாவின் நண்பனான பாலாஜியிடம் தாங்கள் இடம் மாறும் இடத்தின் முகவரியை கொடுத்துவிட்டு செல்கிறார். ஆனால் பாலாஜி அந்த கடித்தத்தை சிகிச்சைக்குப் பிறகு வரும் ஜீவாவிற்கு தெரியாமல் மறைத்து விடுகிறார்.
பிறகு ஜீவா, கார்த்திகாவை தேடி பழைய வீட்டிற்கு செல்கிறார். அங்கு இல்லாததால் அவளை தேடி அலைகிறான். இறுதியில் ஜீவா, கார்த்திகாவை கண்டுபிடித்து கரம் பிடித்தாரா? ஜீவாவை போலீசார் அழைத்துச் செல்ல காரணம் என்ன? என்பதே மீதிக்கதை.
படத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் பொருந்திருக்கிறார் சத்யா. தன் கதாபாத்திரத்தை உணர்ந்து திறம்பட நடித்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் இவரை சுற்றியே இருப்பதால் நடிப்பதற்கான அதிக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார்.
கார்த்திகா கதாபாத்திரத்தில் மியா நடித்திருக்கிறார். தமிழில் முதல் படத்திலேயே வலுவான கதாபாத்திரத்தை ஏற்று அதை திறம்பட செய்திருக்கிறார். இவருடைய நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. மேலும் நண்பனாக வரும் பாலாஜி, ஆனந்த் நாக், அருள் ஜோதி, தம்பி ராமையா, எலிசபெத், வைத்திய நாதன், ரிந்து ரவி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் ஜீவா சங்கர். 1989-களில் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான காட்சிகள் பொறுமையாகவே செல்கிறது. விறுவிறுப்பான காட்சிகள் அமைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். நீண்ட காட்சிகளை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் ரசிக்கலாம். பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘அமர காவியம்’ சுவாரஸ்யம் குறைவு.

ராயல் டிவி தமிழ் மீண்டும் தனது ஒளிப்பரப்பை துவக்கியது

 

ராயல் அக்ரோ நிறுவனத்தின் சேனலான ராயல் டிவி  கடந்த ஆண்டு திருச்சில் விழா நடத்தி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது . பின்னர் சிறு சிறு தவறுகளினால் ஒளிபரப்பு சேவை தடைபட்டது இந்த நிலையில் மீண்டும் இன்று தனது ஒளிபரப்பை    இன் சாட் 4ஏ 83டிகிரியில் துவக்கியது. இதனால் மேலும் தமிழ் சேனல்களின் எண்ணிக்கையில் ஒன்று  உயர்ந்துள்ளது.
SATELLITE DETAILS

Insat4A@83 deg C band

TP 4134 H 11888

தமிழ் நகைச்சுவை

தமிழ் நகைச்சுவை


மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க

கணவன்: ஏன் .. .. ?

மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே


 --------------------------------------------------------------------------------------------------------------

டாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் ?

ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்.


---------------------------------------------------------------------------------------------------------------- 

என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?

இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.


--------------------------------------------------------------------------------------------------------------

  தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி
செய்யலாமா..?

ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?

பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?


--------------------------------------------------------------------------------------------------------------


கணவன் ; சாமி கிட்ட என்ன... மா வேண்டிகிட்ட?

மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க...
நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?

கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்...


--------------------------------------------------------------------------------------------------------------